வகைப்படுத்தப்படாத

வாள்களுடன் பயணித்த இரு இளைஞர்கள் கைது

(UTV|JAFFNA)-சாவகச்சேரி – மட்டுவில் – சிவன்கோவில் வீதியில், வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்புக்களின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், சந்தேகநபர்கள் அனுமதிப்பத்திரம் இன்றியே மோட்டார் சைக்கிளில் பயணித்ததாகவும், ஏதேனும் குற்றச் செயலைப் புரிவதற்காகவே அவர்கள் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

இவர்கள் சாவகச்சேரியைச் சேர்ந்த 21மற்றும் 22 வயதான இருவராகும்.

சந்தேகநபர்களை இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

England win Cricket World Cup

ஹவாய் பகுதியில் வெடித்து சிதறிய எரிமலை

Unbeaten St. Benedict’s record fourth win