விளையாட்டு

வார்னர் மரண அடி: பங்களாதேஸ் அணியுடன் மோதிய அவுஸ்திரேலிய அணிக்கு திரில் வெற்றி

(UTV|COLOMBO) உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் நேற்றைய தினம் அவுஸ்திரேலிய மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதின.

அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பின்ச், வார்னர் வங்கதேச பவுலர்களின் பந்துவீச்சை நாலபுறமும் சிதறடித்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்களை சேர்த்தது. அதிரடியாக ஆடிய பின்ச் அரைசதம் அடித்து 53 ரன்னில் சர்கார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதற்கடுத்து, கவாஜா களமிறங்க, ஒருபக்கம் அரைசதம் அடித்த வார்னரின் அதிரடி தொடர்ந்துகொண்டே இருந்தது. 110 பந்தில் வார்னர், நடப்பு உலகக்கோப்பையில் 2-ஆவது சதத்தை பதிவு செய்தார். இன்னொரு பக்கம் கவாஜா அரைசதம் அடித்தார்.

அவுஸ்திரேலிய அணி 48 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 381 ஓட்டங்களை பெற்றிருந்தது.

மேற்படி பதிலளித்த ஆடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 333 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

Related posts

இலங்கைக்கு எதிரான நியூஸிலாந்து இருபதுக்கு 20 குழாம் அறிவிப்பு; வில்லியம்சன் நீக்கம்

தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டத்தில்

மொஹமட் ஹபீஸுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்