வளைகுடா

வானத்தில் பறக்கும் இளவரசி-வைரலாகும் வீடியோ

(UTV|DUBAI)-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள் படித்திருந்தாலும் வேலைக்கு செல்லமாட்டார்கள்.

அவர்களுக்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால், தற்போது அந்த நிலை மாறி பல்வேறு துறைகளில் சாதிக்க ஊக்கப்படுத்தி வருகிறது.

துபாய் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஷைக்கா மொசாஹ் அல் மக்மூம் (Shaikha Mozah Al Maktoum) என்னும் பெண், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் பெண் கமர்ஷியல் பைலட் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்.

இளவரசி வைஷக்கா துபாயில் இருந்து இத்தாலி சென்ற விமானத்தை இயக்கியுள்ளார். குட் மார்னிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்.. நாம் இப்போது 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம்.இன்னும் சிறிது நேரத்தில் மிலன் விமான நிலையம் சென்றடைவோம்’ என்று அவர் பேசும் வீடியோ வைரலாகி அதிக முறை ஷேர் செய்யப்பட்டு, அதிக லைக்குகளை அள்ளியுள்ளது.

இவர் விமானம் ஓட்டியது அந்நாட்டில் உள்ள பிற பெண்களுக்கு உதாரணம் என்றும் எங்கள் நாட்டு இளவரசி வானத்தில் பறக்கிறாள் என அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சடசடவென்று பெய்த ஆலங்கட்டி மழை:போக்குவரத்து பாதிப்பு…

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட உள்ள அலய்னா பி. டெப்லிடஸ்

ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சைக்கிள் சாகசம்