உள்நாடு

வாக்கெண்ணும் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

(UTV|கொழும்பு) – வாக்கெண்ணும் நிலையங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூரிய கூறினார்.

இதேவேளை, பொலிஸ் அதிகாரிகள் 5 பேர் அடங்கிய 3 ஆயிரத்து 69 கண்காணிப்பு குழுக்கள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

பயணக்கட்டுப்பாட்டில் தளர்வில்லை

எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட மாட்டாது

கடந்த 24 மணித்தியாலயத்தில் 510 பேர் தொற்றாளர்களாக பதிவு