உள்நாடு

வாக்கெடுப்பு இன்றி ஒதுக்கீட்டு சட்டமூலம் நிறைவேற்றம்

(UTV | கொழும்பு) –  2020 ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸவினால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து, ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் முன்னெடுக்கபட்டது.

இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பதிவுசெய்யப்பட்ட பின்னர் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குழுநிலையில் திருத்தங்கள் பல முன்வைக்கப்பட்டு 2020 நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேறியது.

2021ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் 17ஆம் திகதி பிரதமரும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் டிசம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறும்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பில் இருந்து நீர்கொழும்புக்கு மெட்ரோ ரயில் விரைவில் ….

வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகளுக்கான பிசிஆர் வழிகாட்டுதல்கள் அமுலுக்கு

கல்முனை விவகாரம் ஹரீஸ் MPயின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை : முஸ்லிம் தலைவர்கள் கல்முனைக்காக குரல் எழுப்புங்கள் – ரஹ்மத் மன்சூர்