அரசியல்உள்நாடு

வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள்

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபயை தெரிவு செய்வதற்காக நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8.30 மணியிலிருந்து ஆரம்பமானது.

யாழ்.மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகின்றன.

நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்ல போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

காய்கறிகளுக்கு அதிகபட்ச மொத்த விலை நிர்ணயம்

டொலரால் பாதிக்கப்பட்ட பால் மா இறக்குமதி

சர்வதேச பிடியில் பொலிகண்டி ஆர்ப்பாட்டம் [VIDEO]