வகைப்படுத்தப்படாத

வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணி ஆரம்பம்

(UTV|COLOMBO)-உள்ளுராட்சிமன்ற தேர்தல் வாக்களிப்பிற்கான வாக்காளர் அட்டைகள் மற்றும் வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணி இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது.

மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்எம் மொஹமட் நாளை நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக எமது செய்திப்பிரிவிற்கு தெரிவிக்கையில் ,

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட வாக்கு நிலைய பொறுப்பாளர்கள் இன்று நண்பகல் அளவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு தெரிவித்தார்.

340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 8325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நாளை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

13374 வாக்களிப்பு நிலையங்கள் இதற்கென தயார் செய்யப்பட்டுள்ளன. வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளோரின் எண்ணிக்கை 1கோடியே 57 இலட்சத்து 60ஆயிரத்து 50 பேர் ஆகும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இந்திய சுற்றுலாத்துறைக்கு ஓமன் அரசு விருது

ரொபட் முகாபேயின் 37 வருட ஆட்சி முடிவுக்கு வந்தது

சி ஜின்பிங் மற்றும் கிம் ஜாங் உன்க்கு இடையிலான சந்திப்பு இன்று