சூடான செய்திகள் 1

வாக்குச்சீட்டுகளை அரச நிறுவனங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) – எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகளை, இன்றைய தினம் அரச நிறுவனங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்தவர்கள் தமது வாக்குகளை இம் மாதம் 31 ஆம் திகதியும், நவம்பர் மாதம் 1 ஆம் திகதியும் வாக்களிக்கவுள்ளனர்.

குறிப்பிட்ட இரண்டு தினங்களில் வாக்களிக்க முடியாதோர் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி அருகில் உள்ள தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள், எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

உலக பருப்பு வர்த்தகத் துறைக்கான சர்வதேச உடன்படிக்கை சுதந்திரமான வர்த்தகத்திற்கு அழைப்பு விடுக்கின்றது’ அமைச்சர் ரிஷாட்!

விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கும்  பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி