அரசியல்உள்நாடு

வாக்குகளை சிதறடித்து பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இல்லாமல் ஆக்கியது சில சிறிய கட்சிகளே – புத்தளத்தில் வாக்களித்த மக்களை சந்தித்த ரிஷாட் எம்.பி

புத்தளத்து மக்களுக்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இலகுவாக பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இருந்த போதும் அதனை இல்லாமல் செய்தவர்கள் 5 சதவீத வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாத சிறிய கட்சிகள் போட்டியிட்டமை ,நாம் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென கேட்டு வந்த போதும், அவர்களுக்கு மக்கள் வாக்களித்தமையே இப்பிரதிநிதித்துவம் பறிபோனமைக்கு காரணம் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் இந்த வாக்குகள் குப்பைத் தொட்டிக்குள் போடப்பட்டதாகிவிட்டது என்றும் கூறினார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் ஜக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர்களான என்.ரீ.தாஹீர் மற்றும் சட்டத்தரணி முஹம்மட் ஆகியோரினி இல்லத்தில் நேற்றைய முன் தினம் (22) இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் இங்கு றிசாத் பதியுதீன் பேசுகையில் –

கூட்டணி தொடர்பில் பேசப்பட்ட போதும்.இந்த கூட்டணியின் வேட்பாளர்கள் தொடர்பில் மக்களின் நம்பிக்கை ஏற்படவில்லை.இதற்கான காரணமாக கடந்த கால அவர்களின் செயற்பாடாகும்.

இதனால தான் தான் இம்முறை தேசிய கட்சியொன்றில் போட்டியிடுவதன் மூலம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் பற்றி நீண்ட கலந்துரையாடலின் பின்னர் முடிவு எட்டப்பட்டது.

புத்தளம் மாவட்டத்தில் 3 தசாப்தங்களாக பாராளுமன்ற அதிகாரம் இல்லாமல் இருந்த போது முதன் முதலாக சிரேஷ்ட புத்தளத்தின் அரசியல்வாதியான அல்-ஹாஜ் .எம்.எச்.எம். நவவி அவர்களுக்கு தேசியப் பட்டியல் வழங்கி,அதன் பிற்பாடு அடுத்த தேர்தலில் கூட்டமைப்பு அமைத்து பல அரசியல் கட்சிகளை ஒன்றுசேர்த்து பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொடுப்பதிலும்,இந்த தேர்தலில் வியூகம் அமைத்து ஒன்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்வதாக இருந்தால் 1 இலட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் புத்தளம் மாவட்டத்தில் உள்ளதால் அதில் 30 ஆயிரம் வாக்குகளை ஜக்கிய மக்கள் கூட்டணிக்கு அளிப்பதன் அவசியம் தொடர்பில் நாம் பேசிவந்தோம்.

ஆனால் மக்கள் இது தொடர்பில் கரிசனை செலுத்தாது வாக்களித்தன் பலன் நாம் எதிர்பார்த்த எமது பாராளுமன்ற பிரதி நிதியினை இழந்துள்ளோம்

இன்று இந்த மக்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.எமக்கான ஒரு பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இழந்துள்ளமையே,சில பகுதிகளில் வாழும் எமது மக்களின் பஞ்சமும்,வறுமையும் சில கட்சிகளினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எமது புத்தளம் மக்களுக்கு ஏதும் அனர்த்தம் ஏற்பட்டால் தேர்தல் காலத்தில் உங்களுக்கு காசு கொடுத்தவர்கள் வருவார்களா என கேட்கவிரும்புகின்றேன்.

தேர்தல் முடிந்ததும் நான் இன்று உங்களது மாவட்டத்திற்கு வருகைத்தந்துள்ளேன்.

ஏனெனில் நாம் இந்த மக்களை நேசிப்பவன் என்பதினால்,நாங்கள் இன்று உங்களுடன் கலந்துள்ளோம்.இது என்றும் நாமும்,எமது கட்சியும் உங்கள் மீது கொண்டுள்ள அன்பாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மிகவும் குறைந்த வாக்குகளின் வித்தியாசத்தில் தாஹிர் அவர்கள் தோல்வியை தழுவியமை பெறும் கவலைத்தருகின்றது.அவர் வெற்றி பெறுவார் என்ற திட்டத்தை வகுக்க வேண்டும் என்று மேடை மேடையாக நாம் சொன்னோம்.சிலர் அதனை புரிந்து கொள்ளாமல் செயற்பட்டமையினை பார்க்கமுடிந்தது.

புத்தளம் மக்களின் அரசியல் என்பது எம்முடன் பின்னிப் பிணைந்தது.கடந்த கால அரசியல் அதிகாரங்களின் போது நாம் பல்வேறு அபிவிருத்திகளை செய்துள்ளோம்.

பாடசாலை,மதத்தளங்கள்,வைத்திய சாலைகளுக்கான தேவைப்பாடுகள்,மின்சார வசதிகள்,மீனவ சமூகத்திற்கான உதவிகள்,பாதைகள்,வாழ்வாதார திட்டங்கள் என சிலவாகும்.

எனவே நீங்கள் மனம் தளராது எமது கட்சியுடன் இணைந்து பயணியுங்கள் அடுத்துவருகின்ற உள்ளுராட்சி,மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் நாம் சிந்தித்து,யதார்த்தத்தை புரிந்து கொண்டு புத்திசாதுரியமாக செயற்பட வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது என்ற வேண்டுகோளை முன் வைப்பதுடன், கௌரவமான முறையில் இதனை அடைந்து கொள்ள புத்தளம் மக்கள் ஒன்றுபடுவதன் அவசியத்தையும், அதே போன்று எமது கட்சியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றிகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் இதன் போது தெரிவித்தார்.

Related posts

மீண்டும் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை

தேர்தலை முன்னிட்டு அழைத்துவரும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு