சூடான செய்திகள் 1

வாக்காளர் பெயர் பட்டியலுடன் எவ்வித விண்ணப்பமும் வழங்கப்படவில்லை – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

(UTVNEWS | COLOMBO) – இம்முறை 2019 வாக்காளர் பெயர் பட்டியலுடன் 15 இற்கும் 17 இற்கும் இடைப்பட்ட வயதுடையோரது விபரங்களை நிரப்புவதற்கு வழங்கப்பட்டுள்ள பட்டியலை தவிர வேறு எந்தவொரு பட்டியலையும் வழங்கவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

மக்கள் சொத்துக்களான வாகனம், காணிகள் தொடர்பில் கவனத்திற்க் கொண்டு சில கிராம அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவம் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அது முழுமையாக சட்டவிரோதமானது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

பாதுகாப்பு தகவல்கள் என்றாலும் அவ்வாறு கோருவது பிழையானது என சுட்டிக்காட்டிய ஆணைக்குழுவின் தலைவர், அவ்வாறு விண்ணப்பம் ஒன்று கிராம அதிகாரியினால் வழங்கப்படுமாயின் அது தொடர்பில் வாக்காளரிடம் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.

Related posts

ஸ்ரீ.சு.க – அனைத்து மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் இடையே அவசர சந்திப்பு

பொரள்ளை பகுதியில் கடுமையான வாகன நெரிசல்

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு