அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

வாக்காளர்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து யார் வெளியேறினாலும் வாக்காளர்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் எனவும்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை தவிர வேறு எவராகினும் கட்சியை விட்டு வெளியேறினாலும் அவர்களால்  வாக்குகளை பெற முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (31) தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 92 உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்தை எதிர்க்கவில்லை என்றும், அந்தக் குழுவில் சிலர் இன்னமும் எம்முடன்  செயற்பட்டு வருவதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமானவர்களே மஹிந்த ராஜபக்க்ஷவின் படத்தை வைத்து நாடாளுமன்றத்துக்கு வந்தவர்கள் எனத் தெரிவித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கிராமத்துக்குச்  சென்று உள்ளூராட்சி மன்ற வேட்பாளருக்கு வாக்களிக்கச் சொன்னவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்குத் தளம் மஹிந்த ராஜபக்க்ஷவிடம் இருப்பதால், மக்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் என்றும், வெளியேறுபவர்கள் 200, 500 அல்லது 1000 வாக்குகளைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Related posts

தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று

சாதாரண தரப்பரீட்சை மீள் பரிசீலனை தொடர்பான அறிவிப்பு