உள்நாடு

வாக்களிப்பு ஏற்பாடுகள் குறித்து இன்றும் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழுவானது சுகாதார நிபுணர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று(20) கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் வாக்களிப்பின் போது தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் சுயதனிமைப்படுத்தல் நிலையங்களின் வாக்களிப்பு ஒழுங்குகள் குறித்த ஏற்பாடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

இந்நிலையில் நாட்டின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து அதற்கமைய தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான நடமாடும் வாக்காளர் நிலையங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கருத்துக்களை தேசப்பிரிய முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்கவும் : ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிவிப்பு

யால விலங்குகள் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் : வழிகாட்டியர்கள் பணி இடைநீக்கம்

இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி – திங்கட்கிழமை நாட்டை வந்தடையும்

editor