வகைப்படுத்தப்படாத

வாக்களிப்பதற்கு செல்லுபடியான அடையாள அட்டைகள்-மஹிந்த தேசப்பிரிய

(UTV|COLOMBO)-புகைப்படத்துடனான அடையாளம் காணக்கூடிய ஏற்றுகொள்ளப்பட்ட ஆள் அடையாள அட்டையின்றி எந்தவொரு நபருக்கும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய அடையாள அட்டை , அங்கீகரிக்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப்பத்திரம் , உறுதி செய்யப்பட்ட செல்லுபடியான கடவுச்சீட்டு ,அரச ஊழியர் அடையாள அட்டை , ஓய்வூதிய அடையாள அட்டை, மத குருமார்களுக்காக ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை, தேர்தல் ஆணைக்குழுவினால் விநியோகிக்கப்படும் தற்கால அடையாள அட்டை ஆகியவற்றை மாத்திரமே வாக்களிப்பதற்கு பயன்படுத்த முடியும் என்று தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் அடையாள அட்டை வாக்கிளிப்பதற்கு செல்லுபடியற்றதாகும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சமாதான நீதவான்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை ,வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை உள்ளிட்ட எந்தவொரு அடையாள அட்டையும் வாக்களிப்புக்கு பயன்படுத்த முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Former Rakna Lanka Chairman remanded

நீடிக்கும் வௌ்ள அபாய எச்சரிகை!

Bankers sent home as Deutsche starts slashing jobs