உள்நாடு

வாகன இறக்குமதி – பாதிப்பு ஏற்படாது – மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க

வருடமொன்றில் வாகன இறக்குமதிகள் 1.5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்தாலும், அதனால் நாட்டின் கையிருப்புக்கோ அல்லது கடன் மீள்செலுத்துகைக்கோ பாதிப்பு ஏற்படாது என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உத்தரவாதமளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இந்த வாகன இறக்குமதிகள் நடைமுறைக்கணக்கு மீதியில் மிகச்சொற்பளவு பற்றாக்குறையைத் தோற்றுவித்தாலும், கடந்த காலங்களைப்போன்று மிகையான பற்றாக்குறையைத் தோற்றுவிக்காது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி கடன்மறுசீரமைப்பு செயன்முறை முழுமையாகப் பூர்த்தியடைந்ததன் பின்னர் வாகன இறக்குமதிகள் 1.5 பில்லியன் டொலர் வரை உயர்வடைந்தாலும், அரசாங்கத்தினால் கையிருப்பைப் பேணவும், அவசியமான மீள்செலுத்துகைகளை மேற்கொள்வதற்கும், அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கும் இயலும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பணச்சுருக்கம் மற்றும் உயர் பெறுமதிசேர் வரி என்பவற்றின் விளைவாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் புதிய பெறுமதி உயர்வடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது மே தின கூட்டத்தில் அறிவிக்கப்படும் – SLPP

கட்சியிலிருந்து விலக்கப்பட்டோர், இருபதுக்கு ஆதரவளித்தோர் உள்ள அணியில் சேரமாட்டோம் – ரிஷாட்

editor

உள்ளூராட்சி சபை தேர்தல் நிலவரம்