உள்நாடு

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க டபள் கெப் ரக வாகனங்களின் விலைகள் சற்று குறைவடையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நான்கு விதமான வாகனங்கள் கொள்வனவு தொடர்பில் விசேட வர்த்தமானி நேற்று முன்தினம் (27) வெளியிடப்பட்டது.

25 ஆசனங்களுக்கு குறைவான பயணிகள் போக்குவரத்து பஸ், 10 மற்றும் 16 இற்கு இடைப்பட்ட ஆசனங்களைக் கொண்ட வேன், டபள் கெப் மற்றும் லொறி ஆகியவற்றையே கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டுமானால் 90 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கொள்வனவாளரின் பெயரில் மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுதல் அவசியம் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

போதைப் பொருளுக்கு அடிமையான கிராம அலுவலர் கைது!

149 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்!

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று போராட்டத்தில்