உள்நாடு

வவுனியா விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி

(UTV | கொழும்பு) – வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

லொறி ஒன்றுடன் மோட்டார்சைக்கிள் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஜெயமூர்த்தி திசிகாந்தன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குகின்றார்.

சடலம் வவுனியா பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸாரால் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

மண்மேடு சரிந்து விழுந்ததில் இளம் தாதி பலி

மேலும் மூன்று பொலிஸ் பிரிவுகள் முடக்கம்