வவுனியா பல்கலைக்கழக மாணவர்களிடம் கைவரிசை காட்டிய மன்னாரைச் சேர்ந்த ஒருவர் (05.03) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்
கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் காலியில் இருந்து வவுனியா பல்கலைக்கழகத்திற்கு வந்த இரு மாணவர்கள் அதிகாலை வேளை புதிய பேரூந்து நிலையத்தில் பேரூந்துக்காக காத்திருந்த போது அவர்கள் பயணிகள் இருக்கையில் அமர்ந்த நிலையில் தூங்கியுள்ளனர்.
தூக்கம் முடிந்து எழுந்து பார்த்த போது, அவர்களில் ஒருவர் அணிந்திருந்த பாக்கினை காணவில்லை. அதில் இருந்த இரு கைத்தொலைபேசி மற்றும் சங்கிலில் எனப்பன காணாமல் போயிருந்தன.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜெயதிலக அவர்களின் வழிகாட்டலில் பொலிஸ் சார்ஜன்ட் திஸாநாயக்கா, பொலிஸ் கொன்தாபிள்களான தயாளன், கீர்த்தனா ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, மன்னாரைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபரை பொலிசார் சூட்டுசுமான முறையில் அனுராதபுரத்திற்கு வரவழைத்து அங்கு வைத்து கைது செய்தனர். அதன்பின் குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொக்கிராவ, புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து திருடப்பட்ட கைத்தொலைபேசி மற்றும் சங்கிலி என்பன மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணையின் பின் சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.