உள்நாடு

வவுனியா சம்பவம்: இளம் பெண்ணின் கணவரும் பலி!

(UTV | கொழும்பு) –

வவுனியாவில் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்தத் தாக்குதலில் ஏற்கனவே இளம் பெண் (மனைவி) ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகந்தன் என்பவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பெலியத்த கொலை – அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள்

பாராளுமன்ற அமர்வுகள் இன்றுடன் நிறைவு!

மின்சார கட்டணத்தில் திருத்தம் இல்லை – இலங்கை மின்சார சபை

editor