சூடான செய்திகள் 1

வவுனியா – கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலின் பெட்டிகள் விலகல்

(UTV|COLOMBO)-இன்று(23) காலை வவுனியாவில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலின் இரு பெட்டிகள், தலாவ மற்றும் ஷாவத்திபுர பிரதேசங்களுக்கு இடையில் வைத்து இயந்திரத்தில் இருந்து வேறாக சென்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வேறாக சென்ற இரு பெட்டிகள் மற்றும் இயந்திரம் இணைக்கப்பட்டு மீண்டும் கொழும்பு கோட்டை நோக்கி பயணிப்பதாக குறித்த மையம் தெரிவித்தது.

குறித்த சம்பவத்தினால் எந்த ஓர் நபருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

கோட்டாவுக்கு எதிரான மனு; இறுதித் தீர்ப்பு நாளை

மண்சரிவு அபாய எச்சரிக்கை

கண்டி அசம்பாவிதங்கள் – பிரதான சந்தேக நபருடன் மேலும் 9 பேர் கைது