உள்நாடு

வவுனியாவில் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (22.03) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, தோணிக்கல் ஆலடி வீதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய ரங்கசாமி நேசரத்தினம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

தனது குடும்பத்தை பிரிந்து தாயாருடன் வசித்து வந்ததுடன், இவ் வியாபார நிலையத்திலேயே தங்கி இருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

பொரளையில் தீ : வீடுகள் சில கருகின

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை தீக்கிரையாகி பல கோடி ரூபா சொத்துக்கள் சேதம்!

பொடி லெசியின் தாயாரின் பிறந்த நாளுக்காக 2.5 மில்லியன் செலவில் விருந்துபசாரம்