வகைப்படுத்தப்படாத

வவுனியாவில் மோட்டார் குண்டுகள் மீட்பு

(UDHAYAM, COLOMBO) – வவுனியா, கனகராயன்குளம் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு சொந்தமான, பழைய மோட்டார் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மில்லிமீற்றர் 61 வகையைச் சேர்ந்த 13 மோட்டார் குண்டுகளே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலையடுத்து, இந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்ட பிரதேசத்தில் புலிகள் அமைப்பால் இரகசிய முகாம் நடத்திச்செல்லப்பட்டுள்ளதுடன், இராணுவத்தின் தாக்குதலின்போது, இந்த குண்டுகளை புலிகள் இங்கு மறைத்து வைத்திருக்கலாம் என, காவல்துறையின் சந்தேகிக்கின்றனர்.

வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன், அந்தப் பிரதேசத்தில் வேறு வெடிபொருட்கள் உள்ளனவா என, காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையில் இன்று ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

அலரிமாளிகையில் சசுநோதய

අරුවක්කාලූ කසළ රඳවනය වෙත කසළ රැගෙන යාම ඇරඹේ

Sri Lanka likely to receive light rain today