உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் எலிக்காய்ச்சல் நோயினால் 41 பேர் பாதிப்பு

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை சிறுபோகம் மற்றும் பெரும் போகம் போன்ற நெற் பயிற்செய்கை காலங்களில் எலிக்காய்ச்சல் தொற்று கடந்த காலங்களில் குறிப்பிட்டளவு பதிவாகியிருக்கிறது.

எனினும், 2024 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரை 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாதிக்கப்பட்டனர். அவர்கள் குணமடைந்து தற்போது வீடுகளுக்கு சென்றுள்ளனர் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

-தீபன்

Related posts

மழையுடன் மினி சூறாவளி 12 வீடுகள் சேதம்

ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டில் மூவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு

அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்