உள்நாடு

வவுனியாவில் இரு இன இளைஞர் குழு மோதல்: ஒருவர் ஆபத்தான நிலையில் மேலும் 4 பேர் காயம்

(UTV | கொழும்பு) –

வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள மோட்டர் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்பாக குறித்த மோதல் சம்பவம் நேற்று (16.07) இரவு இடம்பெற்றது.

குறித்த பகுதியில் இடம்பெற்ற இரு இன இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது குறித்த பகுதியில் பயணித்த கார் ஒன்று வழிமறிக்கப்பட்டு தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் வவுனியா, யாழ் ஐஸ்கிறீம் வீதியில் வசிக்கும் டிலான் (வயது 25) என்ற இளைஞர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிபகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்தவரின் சகோதர் மீதும் குறித்த குழு வவுனியா வைத்தியசாலையில் வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து வைத்திய வைத்தியசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், வைத்தியசாலை முன்பாகவும் இரு இன இளைஞர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. அதிலும் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் குறித்த சம்பவத்தால் மொத்தமாக 5 பேர் காயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்ற பட்டாணிச்சூர் பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கும் குறித்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழு அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து வேறு இளைஞர்களால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கே.வசந்தரூபன்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு வழங்கப்படும் டீசலின் அளவில் இரட்டிப்பு

நீர்கொழும்பு நகர சபைக்கு சொந்தமான கடைத் தொகுதிக்கு பூட்டு

சஜித் தலைமையில் உருவாகும் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித்