உள்நாடு

வழமை போன்று இன்றும் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக இன்றும்(11) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

மக்கள் வங்கி ATM களில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தினை ஆராய ஐக்கிய மக்கள் சக்தியினால் சட்டத்தரணிகள் குழு

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]