உள்நாடு

வழமைக்கு திரும்பும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள்

(UTV | கொழும்பு) -எதிர்வரும் 20ஆம் திகதி முதல் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தமது இயல்பான பணிகளை ஆரம்பிக்கிறது.

எனினும் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு வரையறுக்கப்பட்ட சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கமைய வாடிக்கையாளர்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு முன்கூட்டியே தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

திணைக்களத்தினால் வழங்கப்படும் திகதியில் சென்று தமக்கான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

வாகனப்பதிவுகள், சாரதி அனுமதிப்பத்திர வழங்கல், வாகன பரிசோதனை சான்றிதழ்களை வழங்கல் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன.

இந்தநிலையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டிய தலைமையகம், வேரஹர அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலங்களின் இலக்கங்கள்வழங்கப்பட்டுள்ளன.

Related posts

ஹபாயா சர்ச்சைக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி!

மெனிங் சந்தையை தற்காலிகமாக இடமாற்ற நடவடிக்கை

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த பிரதமரின் கருத்து கேளிக்கையானது