உள்நாடு

வழமைக்கு திரும்பிய மலையக புகையிரத சேவைகள்!

(UTV | கொழும்பு) –

மலையகத்திற்கான புகையிரத சேவைகள் இன்று அதிகாலை நான்கு மணி முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நானுஓயாவிலிருந்து நேற்று கொழும்பு நோக்கி புறப்பட்டு வந்த விசேட புகையிரதம் கிறேஸ்வெஸ்டனுக்கும் நானுஓயாவிக்கு இடையில் கடந்த சில நாட்களுக்கு முன் தடம் புரண்டதால் நேற்று மாலை 3 மணி முதல் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் தடைப்பட்டன.

இதனால் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வருகை தந்த பயணிகள் தலவாக்கலை புகையிரத நிலையத்திலிருந்து பேரூந்துகள் ஊடாக அனுப்புவதற்கும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பயணிகள் நானுஓயாவிலிருந்து அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.

இதனால் தைப்பொங்கல் தினத்திற்காகவும் விடுமுறை கழிப்பதற்காகவும் மலையக பகுதிகளுக்கு வருகை தந்திருந்த புகையிரத பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

 

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை

இரண்டாவது உரக் கப்பல் இன்னும் இரு வாரங்களில்

தலைமறைவாகியுள்ள 24 பேருக்கு இன்டர்போல் எச்சரிக்கை