(UTV | கொழும்பு) – எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பேருந்து போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்தார்.
உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பேருந்து சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/11/utv-news-6-1024x576.png)