உள்நாடு

வழங்கப்பட்டுள்ள வழிகாட்டலை மீறினால் போக்குவரத்து மீண்டும் முடங்கும்

(UTV | கொழும்பு) – பொது போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார அறிவுறுத்தல்களை மீறும் வகையில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் செயல்படுவார்களாயின், மீண்டும் பொது போக்குவரத்து சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தும் நிலை ஏற்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில், ​நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“.. ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் பயணிப்பது உறுதி செய்யுமாறும் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக பஸ்கள் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் செயற்பட வேண்டும்.

அனைத்து பஸ் உரிமையாளர்கள் சங்கங்களும் போக்குவரத்து சேவைக்கான சுகாதார ஆலோசனை வழிகாட்டிகளுக்கு உடன்பட்டுள்ளன. தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள் மீறப்படுமாயின் தற்போதைய டெல்டா தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை இடைநிறுத்த வேண்டி ஏற்படும்” என அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் தயார்.

கொவிட் தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை நிலையங்கள்

போதைப்பொருள் வர்த்தகம் – STF உத்தியோகத்தர் ஒருவர் கைது.