அரசியல்உள்நாடு

வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை

அரச வீடுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்காவிட்டால் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நீதி, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் தொழிலாளர் அமைச்சின் செயலாளர் நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.

அரச வீடுகளை உடனடியாக கையளிக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு பல நினைவூட்டல்கள் வழங்கப்பட்ட போதிலும், நேற்று வரை 11 பேரே வீடுகளை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு கொழும்பு 7 பகுதியில் 40 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வழங்குவதில் செலவினங்களை குறைக்கும் வகையில் அனைத்து விடயங்களையும் மீளாய்வு செய்து புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தற்போதய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

50 பேர் இல்லாத ஊரில் விகாரை – மன்னாரில் சம்பவம் : விரைந்தார் சாள்ஸ்

இன்று அமுலுக்கு வரும் வகையில் சிற்றூண்டிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் நியமனம்

editor