உள்நாடுகாலநிலை

பலத்த மின்னல், இடியுடன் கூடிய மழை தொடர்பில் எச்சரிக்கை

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

இதன் காரணமாக, மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கொவிட்

சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் புதிய நிர்வாக குழு தெரிவு

சிரேஷ்ட ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாஸ காலமானார்