உள்நாடு

வளிமண்டலவியல் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் தற்போது மீட்கப்பட்டு வருவதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு மன்றம் (CERT) தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.meteo.gov.lk/ கடந்த முதலாம் திகதி (01) சைபர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் அது மீள இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது

இந்நிலையில் மீண்டும் குறித்த இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று (12) அதிகாலை முதல் பாதிப்புக்குள்ளாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த இணையத்தளம் தற்போது மீட்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளதாக, இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த கணனி அவசர பதிலளிப்பு மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு உத்தியோகத்தர் சாருக தமுணுபொல தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடந்ததாக அத்திணைக்களம் தமக்கு அறிவித்ததாகவும், இந்த சைபர் தாக்குதலால், இணையத்தளத்தில் மாற்றம் ஏற்பட்டமை அவதானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக நவம்பர் 01ஆம் திகதியும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதாகவும், அதனைத் தொடர்ந்து முதற்கட்ட விசாரணைகளுக்குப் பின், குறித்த இணையத்தளத்தை மீட்கும் பணி இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, குறித்த இணையத்தளத்தின் தரவுகள் வெளித் தரப்பினரால் திருடப்படவில்லை என தரவுகளிலிருந்து அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் அமுலாகும் சாத்தியம்

இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

சட்ட ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை