சூடான செய்திகள் 1

வளர்ப்பு நாயை திருமணம் செய்து கொண்ட பெண்..!(video)

(UTVNEWS | COLOMBO) – இங்கிலாந்தில், நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயை திருமணம் செய்து கொண்ட விநோத சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த எலிசபெத் ஹோட் என்ற பெண், அண்மையில் நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று,’லோகன்’ என பெயரிடப்பட்டுள்ள தனது வளர்ப்பு கோல்டன் ரெட்ரீவர் நாயை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்தார்.

மேலும் லோகன் பலமுறை தன்னை ஆபத்திலிருந்து காத்ததாகவும், அது மட்டுமே உண்மையான அன்பை தருவதாகவும் கூறிய அவர், மோதிரம் மற்றும் கற்களாலான கைச்சங்கிலியை அணிந்து, அதனை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை தொலைகாட்சியில் நேரடியாக பார்த்த பார்வையாளர்கள் பலரும் அதிர்ந்து போனார்கள்.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் மூதூர் இளைஞர்கள் சந்திப்பு…

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

மீகொட, மினுவாங்கொடையில் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த இருவர் கைது