அரசியல்உள்நாடு

வலுவான பாராளுமன்றமே எனது எதிர்பார்ப்பு – ஜனாதிபதி அநுர

வலுவான பாராளுமன்றமே தனது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

மருதானை அபயசிங்கராமயவில் வாக்களித்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு குறிப்பிடத்தக்க அளவு பிரதிநிதித்துவம் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அனைத்து மாகாணங்களிலும் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு ஐக்கியப்பட்ட அரசியல் கலாச்சாரம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அமைதியான தேர்தல் பிரச்சாரத்தை உறுதி செய்துள்ளது, இது எதிர்கால தேர்தல்களின் தராதரத்திற்கான உதாரணமாக அமையும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

‘இந்த நிலைமையில் தொடர்ந்தும் அரசினை முன்னெடுத்து செல்ல முடியாது’

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்? – இன்று தீர்மானம்