உள்நாடு

வலுவான சர்வதேச கலந்துரையாடல் அவசியம் – ஜனாதிபதி தெரிவிப்பு

(UTV | கொழும்பு) –

2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அதேபோல் “ஓரே தீர்மானம் – ஒரே பாதை” என்ற கூட்டு வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை போன்ற நாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதோடு, இதனால் உலக பொருளாதார நெருக்கடிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க பழகியுள்ளதாகவும் அது புதியதொரு விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் பேர்லின் நகரில் நேற்று நடைபெற்ற “பேர்லின் குளோபல்” மாநாட்டின் முதல் நாளில் அரச தலைவர்களுக்கான கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார். இம்மாநாட்டில், ஜேர்மன் சான்ஸலர் ஒலாப் ஸ்கொல்ஸ் (Olaf Scholz), பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டீ குரூ (Alexander de Croo), கசகஸ்தான் ஜனாதிபதி கெசெம் – ஜோமார்ட் டோகயெவ் (Kassym-Jomart Tokayev), ஐரோப்பிய கவுன்ஸில் தலைவர் சார்ள்ஸ் மிஷெல் (Kassym-Jomart Tokayev) உள்ளிட்டவர்களுடன் பல நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய ரீதியிலுள்ள பொருளாதார கொள்கை மற்றும் நிதிமயமாக்கல் நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். அதேபோல் இந்த கலந்துரையாடலில் உலகின் முக்கிய நிறுவனங்கள் பலவற்றின் நிறைவேற்று அதிகாரிகளும் பங்குபற்றவுள்ளனர்.

பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது, அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளே இறையாண்மைக் கடன் நெருக்கடிகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அபிவிருத்தி அ​டைந்துவரும் பல நாடுகள் எதிர்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க அளவிலான கடன் நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற தற்போதை பொறிமுறைகளில் காணப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பில் கருத்தில் கொண்டு மேலும் நெருக்கடி நிலைமைகள் உருவாவதை தவிர்ப்பதற்கான அவசர வேலைத்திட்டங்கள் அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் சென்ரா பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

   

 

 

 

 

 

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முதல் கிலோமீட்டருக்கு முச்சக்கர வண்டிக் கட்டணம் ரூ. 100 ஆல் அதிகரிப்பு

பிரதமரின் செயலாளராக பேராசிரியர் ஆஷு மாரசிங்க

நாளை முதல் ரயில் நிலையங்களில் விசேட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறை