உள்நாடு

வலுக்கும் ஒமிக்ரோன்

(UTV | கொழும்பு) – எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாத ஒமிக்ரோன் தொற்றாளர்களிடமிருந்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இயல்பாகவே ஒமிக்ரோன் பிறழ்விற்கான பல அறிகுறிகள் தென்படாது என்பதை சுட்டிக்காட்டிய விசேட வைத்திய நிபுணர், நோய் அறிகுறிகள் தென்படாத காரணத்தினால் அன்டிஜன் அல்லது PCR பரிசோதனைகளை மேற்கொள்ளாத குறிப்பிட்ட சதவீத கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இருப்பதால் மேலும் தொற்று பரவலாம் எனவும் கூறியுள்ளார்.

Related posts

இரட்டைக் கொலை நடந்தது என்ன?

களனி பாலத்திற்கு ஆபத்து : உயர் பாதுகாப்பு வலமாக்க நடவடிக்கை

மேலும் 842,400 பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு