உள்நாடு

வலம்புரி சங்கை 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற இளைஞர் கைது.

மாரவில நகரில் வலம்புரி சங்கை 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீரிகம விமானப்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கருவலகஸ்வெவ வனவிலங்கு அதிகாரிகளால் இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவரிடம் இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் நடத்திய விசாரணையின் போது தனது சகோதரர் வெளிநாட்டுக் கப்பலில் பணிபுரிவதாகவும் அப்போது இந்த வலம்புரி சங்கை வீட்டுக்கு எடுத்து வந்ததாகவும் இந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

ரணில் தோற்றால் முழு நாடும் தோல்வியடையும் – மீண்டும் வரிசை உருவாகும் – ராமேஷ்வரன் எம்.பி

editor

மேலும் 339 பேர் கொவிட் தொற்றிலிருந்து மீண்டனர்

இலங்கை வரும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்

editor