உள்நாடு

வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்கள்!

(UTV | கொழும்பு) –

கல்வி சேவைகள், மின்சாரம், சுகாதாரம், மருத்துவம், பயணிகள் போக்குவரத்து, உணவு, அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட சுமார் 90 வகையான பொருட்களுக்கு VAT வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அலுவலக அரச வருமானப் பிரிவின் பணிப்பாளர் கே. கே. ஐ. எரந்த தெரிவித்துள்ளார். மேலும், நெத்தலி, பெரிய வெங்காயம், கருவாடு போன்ற சிறப்பு வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ள 65 வகையான பொருட்களுக்கு VATவரி தாக்கம் செலுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், பெறுமதி சேர் வரி என்பது நமது நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் காரணிகளில் பிரதானமானதாகும். 2023 ஆம் ஆண்டில் VAT வரி மூலம் 600 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுமார் 450 பில்லியன் மாத்திரமே பெறப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கு VATவரி மூலம் சுமார் 1400 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்ப்பு எவ்வாறு இருந்தாலும், வெளிவாரி, உள்ளக மற்றும் வரி விலக்கு போன்ற வரிக் கசிவு போன்ற காரணிகளால் இந்த வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.

இதன் காரணமாக வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வரி விலக்குகளை குறைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. ஆனாலும், மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விலக்குகள் நீக்கப்படவில்லை. கல்வி சேவைகள், மின்சாரம், சுகாதாரம், மருத்துவம், பயணிகள் போக்குவரத்து, உணவு, அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட சுமார் 90 வகையான பொருட்களுக்கு VAT வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. மேலும், நெத்தலி, பெரிய வெங்காயம், கருவாடு போன்ற சிறப்பு வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ள 65 வகையான பொருட்களுக்கு VATவரி தாக்கம் செலுத்தாது என குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மனித நேயத்துக்காக பாடுபடுவோருக்கு பாராட்டு

ரொஷான் ரணசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்!

நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் சிறைக்காவலருக்கு விளக்கமறியல்