உள்நாடு

வறட்சி காலநிலை – 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

(UTV|கொழும்பு)- நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 55 ஆயிரத்து 763 குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 30 ஆயிரத்து 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இந்த வறட்சி அதிகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிநீரை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமானது வறட்சி காரணமாக குறைவடைந்துள்ள போதிலும், மின் தடையை ஏற்படுத்துவதற்கு எந்தவித தீர்மானங்களும் எடுக்கவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று

கடினமான நேரத்தில் இலங்கைக்கு உதவுவதாக IMF உறுதி

பேருந்து சேவை மீண்டும் குறைகிறது