வகைப்படுத்தப்படாத

வறட்சியால் வன விலங்குகளும் கடுமையாக பாதிப்பு!!

(UDHAYAM, COLOMBO) – 12 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறட்சி காரணமாக வன விலங்குகளும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களே அதிக பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, பொலன்னறுவை, அநுராதபுரம், மொனராகலை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பொலன்னறுவ மாவட்டத்தின் பிரதான நீர்நிலைகள் அனைத்தினதும் நீ குறைவடைந்துள்ளது.

மின்னேரியா மற்றும் கவுடுல்ல நீர்நிலைகளை தங்கியிருக்கும் சுங்காவில், பம்புராண ஆகிய பிரதேசங்களில் நெற்செய்கை நீரின்றி பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.

புத்தளம் மாவட்ட மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குடிநீருக்காக அல்லல்ப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

13 ஆயிரம் அகதிகளை பாலைவனத்திற்கு துரத்திய அல்ஜீரியா

புனித ஸ்தலங்கள் அபிவிருத்தி

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் விடுவிப்பு