உள்நாடுவணிகம்

வர்த்தக நிறுவனங்களின் தகவல் பெறும் கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரசு தொற்று நிலைமையடுத்து பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறை வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மே மாதம் 15 ஆம் திகதிவரை கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர தெரிவித்துள்ளார்.

இதற்காக துரிதமாக பதிலளிக்குமாறு வர்த்தக சமூகத்தினரிடம் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என்று தொழில் திணைக்களம் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://forms.gle/pE64ygeuHrK7TZcH9 என்ற இணையதளத்தில் பிரவேசித்து நேரடி ஆய்வுக்கு பங்களிப்பு செய்ய முடியும்.

இதற்கு மேலதிகமாக தொழில் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.labourdept.gov.lk  என்ற இணையதளத்தின் மூலம் கணக்கெடுப்புக்கான தகவல்களை வழங்க முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ‘ஜனாதிபதி செயலகம்’

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை திருத்தம்

தொலைபேசியில் ஹலோ என்பதை தவிர முஷர்ரப் பேசியவை பொய்களே – ரிஷாட் எம்.பி

editor