அரசியல்உள்நாடு

வர்த்தகங்களை பாதுகாக்கவும் முன்னேற்றவும் தேவையா ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது – பிரதமர் ஹரிணி

வர்த்தகங்களை பாதுகாக்கவும், அவற்றை முன்னேற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்கவும் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பெப்ரவரி 21 ஆம் திகதி தெஹிவளை ஈகிள் லேக்சைட் ஹோட்டலில் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “தேசிய கைத்தொழில் விசேட விருது விழா 2024” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு, சிறிய அளவிலான தொழில்முயற்சிகள் பிரிவில் JBRIKS PVT LTD, நடுத்தர அளவில் SINGHE Furniture Manufacturer PVT LTD மற்றும் பெரிய அளவில் EARTHFOAM PVT LTD ஆகியவை 2024 ஆம் ஆண்டின் மூன்று சிறந்த தேசிய தொழில்துறை தரச்சின்னங்களாக பிரதமரிடம் இருந்து விருதுகளைப் பெற்றன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

“இந்த சந்தர்ப்பத்தில் உங்களுடன் இணைந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.பொருளாதார நெருக்கடியான காலக்கட்டத்தில் நீங்கள் இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுவது எங்களுக்கு பலம்.

அரசாங்கம் என்ற வகையில் கைத்தொழில்களை பாதுகாக்கவும், கைத்தொழில்களின் வளர்ச்சிக்கு தேவையான ஆதரவை வழங்கவும் நாம் செயற்பட்டு வருகிறோம் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன். இத்தகைய தொழில்களில் உங்கள் ஈடுபாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள எங்களுக்கு உதவும்.

இதற்கு கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள் நல்ல தலைமைத்துவத்தை வழங்குவார் என நான் உறுதியாக நம்புகிறேன். அவர் சிறு, நடுத்தர மற்றும் பெரிய வர்த்தகத துறைகளை மேம்படுத்த உதவுகிறார்.

இந்த தொழில்கள் பொருளாதாரத் துறையை பலப்படுத்துவது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன. கைத்தொழில்கள் சமூகத்தின் முதுகெலும்பு.

இந்தத் தொழில்களில் நீங்கள் அனைவரும் வளப் பற்றாக்குறை, கலாச்சாரத் தடைகள், பாலினம் போன்ற பல சவால்களை எதிர்கொள்வதை நாங்கள் அறிவோம்.

இலங்கையில் பொருளாதார பலத்தை கட்டியெழுப்புவதற்கு பெண்களின் தொழில்முயற்சிகள் மிகவும் முக்கியமானது. இலங்கையின் தரச்சின்னத்தை உலகம் முழுவதும் பரப்ப விரும்புகிறோம்.

விருது பெற்ற தொழில்முயற்சியாளர்களே, உங்கள் பயணம் இத்துடன் நிற்காது, உங்கள் பயணம் இப்போது தான் தொடங்குகிறது.

தொழில்கள் மூலம் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்” என்று பிரதமர் கூறினார்.

இங்கு உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்நெத்தி அவர்கள் ,,

“எமது அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கும் ஒரு தரச்சின்னம் உள்ளது. எந்தவொரு வர்த்தக சின்னத்தைப் பார்க்கிலும் இது இலங்கையின் தயாரிப்பு என்பதையே நாங்கள் மதிக்கிறோம்.

ரூபாயை டொலர்களாக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சர் என்ற வகையில் கௌரவ ஜனாதிபதி அவர்களால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கைத்தொழில் துறைகளுக்கு பல சலுகைகளை கிடைக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் தேசிய வரிக் கொள்கையை முன்வைக்க எதிர்பார்க்கிறோம்.

பாடசாலை மட்டத்திலிருந்தே தொழில் முயற்சியின் வளர்ச்சி, ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல், அனைத்து தொழில்துறைகளையும் கட்டியெழுப்புதல் போன்றவற்றின் மூலம் நம் நாட்டில் தொழில்துறை ஆர்வத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். அதற்காக அனைவரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழில்முயற்சியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

-பிரதமர் ஊடகப் பிரிவு

Related posts

காணமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு!

மினுவாங்கொட – மொத்தமாக 1,034 பேருக்கு கொரோனா

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் இராணுவத்தினரிடம்