உள்நாடு

வருமான வரிக்கணக்கை செலுத்துவதற்கான காலக்கெடு நீடிப்பு!

(UTV | கொழும்பு) –    வருமான வரிக்கணக்கை செலுத்துவதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விதிகள் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வருமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதன்படி, குறித்த காலக்கெடு நவம்பர் 30ஆம் திகதியிலிருந்து மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இக்காலக்கட்டத்தில் அபராதம் விதிக்கப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

17 வயதுக்குள் பாடசாலை கல்வியை முடிக்கத் திட்டம்.

சீனக்கப்பல் குறித்து இந்தியா அதிருப்தி!

கடமைகளைப் பொறுப்பேற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர்!