உள்நாடுவணிகம்

வரிக் கொள்கைக்கு எதிராக IMF பிரதிநிதிகளிடம் மனு – தொழில் வல்லுநர்களின் ஒன்றியம்.

(UTV | கொழும்பு) –

சம்பாதிக்கும் போது செலுத்தப்படும் வரிக் கொள்கையை திருத்தியமைக்க வேண்டும் என கோரி தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை அலுவலகத்திற்கு மனுவொன்றை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையில் நீடிக்கப்பட்ட கடன் வேலைத்திட்டத்தின் முதல் மீளாய்வுக்காக நாட்டுக்கு விஜயம் செய்துள்ள தூதுக்குழுவினரின் கவனத்திற்காக உரிய மனு கையளிக்கப்பட்டதாக தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நாணய நிதியத்தின் முதல் மதிப்பாய்வில் சம்பாதிக்கும் போது செலுத்தப்படும் வரிக் கொள்கை தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்றால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அந்த ஒன்றியம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையானது, பெரிய அளவிலான இலாபம் ஈட்டும் நிறுவனங்களை விலக்கி தொழிலாளர் வர்க்கத்தின் மீது சுத்தப்பட்டுள்ளதாக முன்னணி சோசலிஸ்ட் கட்சி குற்றம் சாட்டுகிறது.

இதேவேளை, வாழ்க்கைச் செலவு கட்டுப்படியாகாத வகையில் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து உழைக்கும் வர்க்க மக்களுக்கும் 20,000 ரூபா கொடுப்பனவை கோரி போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா வைரஸ் – மேலும் ஏழு பேர் அடையாளம்

#கோட்டாகோகம தாக்குதல் : முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் மொரட்டுவை மாநகர சபை ஊழியரும் கைது

இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா உறுதி [VIDEO]