உள்நாடு

வரவு – செலவுத் திட்டம் 2021

(UTV | கொழும்பு) – வரவு-செலவுத்திட்ட யோசனைகளை முன்வைத்தல் ஆரம்பமாகியது. இது சுதந்திர இலங்கையின் 76ஆவது வரவு-செலவுத்திட்டமாகும்.    

04:34 PM
இலங்கை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படாத அனைத்து வாகனங்களையும் விடுவிக்க நடவடிக்கை. இவ்வாறு விடுவிப்பதற்குரிய வரி, அபராதப் பணம் அறவிபடப்பட்ட பின்பே விடுவிக்கப்படும்.

04:28 PM
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறவிட தீர்மானம் அடுத்த வருடம் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து செயலுரு பெறும்

சிகரெட் மீதான உற்பத்தி வரி உடனடியாக செயலுரு பெறும். 5 ரூபாயால் அதிகரிக்கப்படும்

மதுவரி உடனடி அமுலுக்கு வரும். இன்று மாலை அது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படும்.

விபத்துக்குள்ளாகும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிட தீர்மானம்

04:24 PM
கஸ்டப்பிரதேசங்களிலுள்ள பௌத்த விகாரைகளின் பராமரிப்பு நடவடிக்கைக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

04:22 PM
பல்வேறு காலப்பகுதிகளில் காணாமல் போனவர்களுக்கு நட்டஈடு வழங்க 300 மில்லியன் ரூபாயை வழங்க நடவடிக்கை

ஆசிரியர்-சம்பள முரண்பாட்டை ஒரே நேரத்தில் தீர்ப்பதற்கு, 30 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

04:19 PM
அரசாங்க பணியாளர்களின் மோட்டார் சைக்கிள் கொள்வனவுக்காக 500 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை

சேவைகளில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளை 2022 ஜனவரி மாதம் தொடக்கம் நிரந்தர நியமனம் வழங்கவும் 7,600 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்க 100 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை

04:15 PM
விளையாட்டு அபிவிருத்திக்காக 3,000 மில்லியன் ஒதுக்கீடு

நீதிமன்ற நடவடிக்கை மற்றும் நீதிமன்ற டிஜிட்டல் மயப்படுத்தவும் நீதிமன்ற உட்கட்டமைப்பு
வசதிகளை மேம்படுத்த 5,000 மில்லியன் ரூபாயை ஒதுக்க நடவடிக்கை

பொதுமக்கள் பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையங்களுக்கு 500 மில்லியன்

கைதிகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்த 200 மில்லியன் ஒதுக்கீடு

விசேட தேவையுடையவர்களுக்கு, முதியவர்களுக்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

கர்ப்பிணிகளுக்கான போசாக்கு பொதி 2 வருடங்களுக்கு

04:10 PM
சூழல் பாதுகாப்புகாக்காக 2,000 மில்லியன் ஒதுக்கீடு

வனப்பாதுகாப்பக்காக 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

வனஜீவராசிகள் பாதுகாப்புக்காக 1,000 மில்லியன்

கிராமிய உட்கட்டமைப்பு, பொது சேவைகளுக்காக 5,300 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை

சுகாதாரம், சுதேச மருத்துவத்தை அபிவிருத்தி செய்ய 5,000 மில்லினை ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு

விளையாட்டு அபிவிருத்திக்காக 3,000 மில்லியன் ஒதுக்கீடு

03:38 PM
கொரோனா முடக்க காலத்தில் வருமானத்தை இழந்த பாடசாலை வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிக்க, 400 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழிகிறேன்.

வருமானத்தை இழந்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு 600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:30 PM
வீதி அபிவிருத்திக்காக மேலதிகமாக 20,000 ரூபாய் மில்லியனை ஒதுக்கீடு

03:28 PM
அனைவருக்கும் குடிநீர் வசதி 24 மணி நேரமும் சுத்தமான குடிநீரை வழங்க 15,000 ரூபாய் மில்லியனை ஒதுக்க நடவடிக்கை

03:22 PM
திரவப்பால் உற்பத்தியை அதிகரிக்க தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக 1,000 மில்லியன் ரூபாயை ஒதுக்க எதிர்பார்க்கின்றோம்.

03:20 PM
புதிய தொழிநுட்பத்துடன் கூடிய பெருந்தோட்டங்களை உருவாக்குவது எமது நோக்கமாகும்.

அரசுக்கு சுமையை ஏற்றாமல் ஏராளமானவர்கள் இத்துறைகளில் செயற்பட்டு வருகின்றனர். எனவே குறிப்பிட்ட அமைச்சுகளும் திணைக்களங்களும் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.

03:18 PM
கட்டணங்கள் மற்றும் சேவைகளை தரப்படுத்துவதில் கவனம் செலுத்தி, முச்சக்கர வண்டித் தொழிலுக்கு ஒழுங்குமுறை அதிகார சபை அறிமுகப்படுத்தப்படும்.

03:15 PM
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஏற்றுமதியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்றப்படும்.

03:13 PM
தொழிலுக்காக வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்பவர்களின் அறிவுத்திறனை, பயிற்சியை மேம்படுத்த, வெளிநாட்டு தூதுவர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க முன்மொழிகிறேன்.

03:11 PM
புகையிரத திணைக்களத்தால் திறம்பட பயன்படுத்தப்படாத காணிகளை கலப்பு அபிவிருத்திக்காக பயன்படுத்த நடவடிக்கை

03:07 PM
சேதன பசளை உற்பத்தி திறனை அதிகரிப்பது கிராமிய அளவில் மேற்கொள்ளப்படும்.

03:06 PM
இறப்பர் சார்ந்த உற்பத்திகளின் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தவும் இறப்பர் சார்ந்த உற்பத்தி தொழிலை ஊக்குவிக்கவும் முன்மொழிகிறேன்.

03:04 PM
இலங்கையை முதன்மையான இரத்தினக்கற்கள் கொள்வனவு மையமாக மாற்றுவது எமது நோக்கமாகும்.

03:02 PM
இளைஞர்களை வேலைத் தேடுபவர்களுக்கு பதிலாக தொழில் வழங்குனர்களாக மாற்றும் திட்டத்தை உருவாக்கி வருகின்றோம்.

03:00 PM
ஆடைக் கைத்தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை.

02:52 PM
அரச ஊழியர்களுக்கு புதிய சம்பள முறைமை ஏற்படுத்தப்படும். உற்பத்தித்திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டே இது செய்யப்படுகின்றது.

02:51 PM
நாடு முழுவதும் தொலைத்தொடர்பு கட்டமைப்பை வரைவில் நிறுவி, நாடு முழுவதிலுமுள்ள 10,115 பாடசாலைகளுக்கும் உரிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி, அதிவேக இணைய ப்ரோட் பேண்ட் வசதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

02:49 PM
இலங்கையில் காப்புறுதி கூட்டுதாபனத்தின் வணிக ரீதியான அணுகுமுறையை போட்டி நிலைமைக்கு எடுத்துச் சென்று, சகலருக்கும் பலன் கிடைக்கக் கூடிய வகையில் மாற்றுதல்.

நேரடியான வருமானத்தை ஈட்டுவதற்கு பயன்படாத சொத்துக்களை பயன்படும் வகையில் மாற்றுதல்.

02:45 PM
நடைமுறை சமுர்த்தி செயற்பாடுகளை நவீன மயப்படுத்த எதிர்பார்க்கின்றோம். கிராமிய அபிவிருத்தி இயக்கமாக அதனை மாற்ற எதிர்பார்ப்பு.

02:41 PM
தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைவிடாது 5வருடங்கள் சேவை செய்ய வேண்டும். அதனை 10 வருடங்கள் அதிகரிக்க முன்மொழிகிறேன். இது ஜனாதிபதி பதவி உள்ளிட்ட அனைவரும் அடங்குவர்.

02:41 PM
# அரச உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் மானியம் 5 லீற்றரால் குறைப்பு
# தொலைப்பேசி கட்டணங்கள் 25 சதவீதம் குறைப்பு
# மின்சார கட்டணம் 10 சதவீதம் குறைப்பு

02:39 PM
புதிதாக அலுவலக கட்டடங்களை அமைப்பதை இரண்டு வருடங்களுக்கு இடைநிறுத்த முன்மொழிகிறேன்.

02:38 PM
அரச நிதி கொள்கை வகுக்கும் போது, இரண்டாவது முன்னுரிமை சேமிப்பின் பால் வழிநடத்துவதாகும். மூலதன உதவிகளை வழங்கி அரச மற்றும் தனியார் துறையினரின் வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கான சாளரங்கள் திறந்து விடப்படும்.

02:35 PM
தகவல் தொழில்நுட்ப சேவையை விரிவுபடுத்த வேண்டும் – நிதியமைச்சர்

02:32 PM
நட்புரீதியான இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

02:30 PM
நட்புரீதியான இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

02:27 PM
உற்பத்திப் பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

02:24 PM
தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை. தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளுக்கு மேலும் இடமில்லை.

கொரோனாவை ஒழிக்க நாட்டை முழுமையாக முடக்கி மக்களை பாதுகாக்க முடிந்தது.

மக்கள் தொகைக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை.

நாம் கூறுவதை செய்யும் அரசாங்கம். தடுப்பூசி நடவடிக்கையில் எமது இலக்கை எட்டியுள்ளோம்.

02:11 PM
கொவிட்-19 காரணமாக தேசிய திறைசேரியில் இருந்து சுமார் 500 பில்லியன் ரூபாய் இழக்கப்பட்டுள்ளது.

02:06 PM
இந்த அரசாங்கத்தின் இரண்டாவதும் நிதியமைச்சர் என்ற ரீதியில் முதலாவது வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனது உரையை ஆரம்பித்துள்ளார்.

02:05 PM
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சபைக்குள் பிரவேசித்தார். முன்னாள் நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, யோசனைகளை கோவையிலேயே எடுத்து வந்தார்

02:02 PM
ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷவும் பாராளுமன்றத்துக்கு சற்று முன்னர் வருகைதந்தார்.

01:59 PM
பாராளுமன்றத்தை கூட்டுவதற்காக, உறுப்பினர்களை சபைக்குள் அழைப்பதற்கான அழைப்பு மணி ஒலிக்கிறது.

Related posts

சட்டப்படி வேலைசெய்யும் போராட்டம் இன்றும் தொடர்கிறது.

சீன பயணிகளுக்கு விசா வழங்குவதில் தடை இல்லை

குவைட்டிலிருந்து நாடு திரும்பிய 21 இலங்கையர்கள்