அரசியல்உள்நாடு

வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை – சஜித் பிரேமதாச

வரவு செலவுத் திட்டத்தின் ஆரம்பம் முதல், நாட்டின் பிரதான பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு நிலையான தீர்வை பெற்றுக் கொடுக்கும் நிலைப்பாட்டிலயே ஐக்கிய மக்கள் சக்தி இருந்தது.

ஆனால் இந்த வரவு செலவுத் திட்டம் அத்தகைய தீர்வை வழங்கவில்லை.

இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் விளக்கமளித்தால், பொல்துவ சந்தியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளின் நம்பிக்கைகள் அபிலாஷைகள் ஏமாற்றமடைந்துள்ளன.

தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம், இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 35000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. வழங்கிய ஏராளமான வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளன.

இம்மக்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கும் நேரத்தில், இந்த நாட்டிற்கு ஒரு புதிய பயணமும், தொலைநோக்கு பார்வையும் அதன் பிரகாரமைந்த ஒரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இது மக்களைப் பாதுகாத்து, மக்களை வாழவைக்கும் வேலைத்திட்டமாக அமைந்திருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related posts

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் வான்படை அதிகாரிகள் இராணுவ தலைமையத்திற்கு விஜயம்[PHOTO]

பாடசாலை பைககளை நன்கொடையாக வழங்கியது சீனா

editor

1,700 ரூபா நாளாந்த சம்பளத்தை கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்.