கேளிக்கை

வரலாறு படைத்த ரவுடி பேபி

(UTV|INDIA)  தனுஷ், சாய்பல்லவி, நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார்.

மேற்படி இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.
‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை ‘யூடியூப்’பில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைரலான இந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது.
இந்த பாடல் வெளியான 16 நாட்களில் 10 கோடி பார்வைகளையும், 41 நாட்களில் 20 கோடி பார்வைகளையும், 69 நாட்களில் 30 கோடி பார்வைகளையும், 104 நாட்களில் 40 கோடி பார்வைகளையும் 157 நாட்களில் 50 கோடி பார்வைகளையும் பெற்றுள்ளது.
இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வைகளை பெற்றுள்ளது. இதுகுறித்து தனுஷின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பதிவில், “எங்களுடைய ரவுடி பேபி பாடலுக்கு நீங்கள் காட்டிய அன்பால் பேச்சின்றி திகைத்துப் போய் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

Related posts

சிரேஷ்ட திரைப்பட கலைஞர் திஸ்ஸ விஜேசுரேந்திர காலமானார்

IPL இறுதிப் போட்டியின் போது 2.0 படத்தின் ட்ரெயிலர் வௌியீடு?

பிரபல நடிகை தீவிர சிகிச்சை பிரிவில்…