உள்நாடு

வரட்சியான காலநிலை – சில வனப்பகுதியில் காட்டுத்தீ

(UTV|கொழும்பு)- நாடு முழுவதும் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நாட்டின் சில வனப்பகுதிகளில் பதிவாகியுள்ள தீப்பரவல் சம்பவங்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

இந்த காலப்பகுதியில் வன விலங்குகள் வேட்டையாடுவதற்காக தீவைப்பு சம்பவங்கள் ஏற்படுவதாகவும் இவ்வாறான நபர்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறியப்படுத்துமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முத்துராஜவெல வனப்பகுதி, பட்டிய வல உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய தினம் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

அத்துடன் சிங்கமலை காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 25 ஹெக்டேயர் வனப்பகுதி அழிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கோயம்புத்தூரில் இருந்து நாடுதிரும்பிய 113 மாணவர்கள்

இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு

கொழும்பு பல்கலையிலிருந்து வௌியான புதிய உற்பத்திகள்!