உள்நாடு

வயதெல்லையை தீர்மானிக்கும் கலந்துரையாடல் இன்று

(UTV | கொழும்பு) – தடுப்பூசி செலுத்தப்படும் மாணவர்களின் வயதெல்லையை தீர்மானிக்கும் கலந்துரையாடல் இன்று(15) இடம்பெறவுள்ளது.

பாடசாலைகளை மீளத் திறப்பதை அடிப்படையாக கொண்டு இந்த கலந்துரையாடல் அமையவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, முன்பள்ளி முதல் தரம் ஆறு வரையிலா அல்லது 12 முதல் 13 வரையான மாணவர்களுக்கா? தடுப்பூசி வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்தின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளின்படி, 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு ஏதாவதொரு தாக்கநிலை ஏற்படக்கூடும் என்ற கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற உலக நிலைமைகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இதுவரை 821 கடற்படையினர் குணமடைந்தனர்

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

editor

 தங்கத்தின் இன்றைய நிலவரம்