உள்நாடு

வன விலங்குகளின் எண்ணிக்கையில் அதிகாரிப்பு

(UTV | கொழும்பு) –  வன விலங்குகளின் எண்ணிக்கையில் அதிகாரிப்பு

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையில், தற்போதுள்ள வன அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் நாட்டில் வனவிலங்குகளின் எண்ணிக்கை தாங்க முடியாத வகையில் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

வன விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விலங்குகள் உரிமை அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தின் அளவும் அதிகரித்து வருவதாக அறிக்கை கூறுகிறது.

பயிர்களை சேதப்படுத்தும் ஐந்து விலங்குகளை அறிக்கை அடையாளம் காட்டுகிறது. சேதத்தை பொறுத்தவரை, டோக் குரங்குகள், மயில்கள், ராட்சத அணில் மற்றும் காட்டுப்பன்றிகள் முதன்மையானவை எனவும்

டோக் குரங்குகள் தென்னை முக்கோணத்தில் மிகவும் கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், டோக் குரங்குகள் மற்றும் ராட்சத அணில்களால் அழிக்கப்பட்ட தேங்காய்களின் எண்ணிக்கை 92 மில்லியன் ஆகும். ஆண்டின் இறுதியில், அந்தத் தொகை 200 மில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வடக்கு , கிழக்கிலுள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானது – அமைச்சர் பவித்திரா

சம்மாந்துறையில், பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு