கிசு கிசு

வன ஜீவராசிகளின் உயிருக்கு கேள்விக்குறி [PHOTOS]

(UTV|UDAWALAWA) – உடவலவை – தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள கால்வாயிலிருந்து கொலை செய்யப்பட்டுள்ள சிறுத்தை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று(02) அந்த உடல் மீட்கப்பட்டுள்ளதோடு, அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சிறுத்தை துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. அதனுடன் சடலம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கதிர்காமம் – புத்தல பிரதான வீதியில் பயணித்த தரப்பினர்களை சிறுத்தை ஒன்று தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதனுடன் யால பூங்காவை பார்வையிடுவதற்காக சென்ற தரப்பிரை சிறுத்தை ஒன்று தாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Image

Image

Related posts

பொலிஸாரை தாக்கிய குத்துச்சண்டை வீரர்…

குரலற்றவர்களின் குரலாக ‘சிமோன் பைல்ஸ்’ [முழுமையான கதை]

வருடங்கள் 26 – ஆட்டம் நிறைவுறும் தருணம் இது